சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான பாலுமகேந்திராவுக்கு, பாராட்டு விழா நடத்த போகிறார்கள். தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் பாலுமகேந்திரா. இவரது படங்கள் அனைத்துமே தலைசிறந்த படைப்புகள் தான். அதிலும் இவரது படப்பாடல்கள் தனி சிறப்பு வாய்ந்தவை. இசைஞானி இளையராஜா தான் இவரது படங்கள் அனைத்திற்கும் இசையமைத்து இருப்பார்.
இந்நிலையில் பாலுமகேந்திராவின் படப்பாடல்களை மட்டும் தனியாக தொகுத்து, பாலுமகேந்திரா ஹிட்ஸ் என்ற தலைப்பில் ஒரு பாட்டு திருவிழாவையும், பாராட்டு திருவிழாவையும் நடத்த போகிறார்கள். ஸ்ரீதேவி பைன் ஆர்ட்ஸ் அமைப்பின் தலைவர் சிவசங்கர், இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். மேலும் விழாவில் பாட மூத்த கலைஞர்களை தேடி, தேடி சிறப்பித்துக் கொண்டிருக்கிறார். பாட்டோடு மட்டும் நின்றுவிடாமல், பாலு மகேந்திரா குறித்த பல சுவையான தகவல்களை மேடையில் சொல்லி சுவாரஸ்யம் தரவிருக்கிறார்கள்.
டிசம்பர் 4ம் தேதி ஞாயிறு, மாலை 6.30 மணிக்கு காமராஜர் அரங்கத்தில் இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த விழாவில் தங்களது குருநாதரை கவுரவிக்க அவரது சிஷ்யர்களான டைரக்டர் பாலா, கவிஞர் அறிவுமதி, சீமான், வெற்றிமாறன், சீனு ராமசாமி, உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்களாம்

No comments:
Post a Comment