December 6, 2011
தமிழ்த் திரையுலகின் சிறந்த ஒளிப்பதிவாளரான பாலு மகேந்திரா புதுப்படம் ஒன்றை இயக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
திரையுலகில் சிறந்த ஒளிப்பதிவாளராக மதிக்கப்படும் பாலு மகேந்திராவுக்கு சிறப்பு செய்ய பாலு மகேந்திரா ஹிட்ஸ்(Balu Mahendra Hits) என்ற நிகழ்ச்சியை சென்னை காமராஜர் அரங்கத்தில் திரையுலகத்தினர் நடத்தியுள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றிய கவிஞர் அறிவுமதி, இயக்குனர் சீனு ராமசாமி, படித்துறை பட இயக்குனர் சுகா, கவிஞர் நா.முத்துக்குமார் மற்றும் ஆடுகளம் பட நடிகர் ஜெயபாலன், பானு சந்தர் உள்பட பல திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு அவரை பாராட்டு மழையில் மூழ்கடித்து நெகிழ வைத்துள்ளார்கள்.
இந்த விழா குறித்து கவிஞர் அறிவுமதி கூறுகையில், பல்லவி அனு பல்லவி படத்தின் மூலம் எங்கள் இயக்குனர் பாலு மகேந்திராவிடம், மணிரத்னம் திரையுலக பாடம் பயின்றார். இயக்குனர் பாலு மகேந்திராவின் உதவியாளர் என்று மணிரத்னம் சொல்ல வேண்டும் என்று கூறினார்.
திரையுலக பிரபலங்களின் பாராட்டை ஏற்று பேசிய பாலு மகேந்திரா திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்த நான், என் நண்பர் ஒருவர் தந்த உற்சாகத்தில் படத்தை இயக்கி இயக்குனர் ஆனேன். தற்பொழுது புதுப்படத்தை இயக்கும் வேலையில் இறங்கியுள்ளேன் என்றார்.

No comments:
Post a Comment