டூயட் பற்றிய பாலுமகேந்திராவின் ஆதங்கம்...
இன்று நண்பர் அபுஅஃப்ஸருக்கு அறுவை சிகிச்சை என நண்பர் நவாஸுதீன் கூறியிருந்தார்.
அபு விரைவில் குணமடைந்து வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்...
________________________________________________________________
சென்னையில் சத்யம் திரையரங்கில் நேற்று “அங்காடித்தெரு” திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.

________________________________________________________________
சென்னையில் சத்யம் திரையரங்கில் நேற்று “அங்காடித்தெரு” திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.
“அங்காடித்தெரு” திரைப்படத்தின் இயக்குனர் “வெயி” எனும் வெற்றிப்படம் தந்த வசந்தபாலன்.
தயாரிப்பு - ஐங்கரன் இன்டர்நஷனல்.
ஹீரோ - மகேஷ்.
ஹீரோயின் - அஞ்சலி.
இசை - ஜி.வி.பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனி.
யதார்த்தமாக படமெடுக்கிறேன் பேர்வழின்னு சொல்லிட்டு வர்ற சில இயக்குனர்கள் கூட வெளிநாட்டில் டூயட் ஷூட் பண்ண தயங்குவதில்லை.
படத்தில் கதைன்னு ஒன்னு இருக்கோ இல்லையோ நாயகனும் நாயகியும் சந்தோஷமாக ஆடிப்பாடும் டூயட் இல்லாமல் படமே இல்லையென்ற நிலமைக்கு வந்துவிட்டது நம் தமிழ் சினமா...
இது தொடர்பாக இந்த பாடல் வெளியீட்டு விழாவில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் பாலுமகேந்திரா...
அவர் கூறிய கருத்துகள்...
” தமிழ் சினிமா தற்போது மாற்றம் கண்டு வருகிறது. ஆனால் இந்த டூயட் என்னும் விஷயம் மட்டும் இன்னும் மாறாமல் அப்பிடியே இருக்கிறது.
இந்த டூயட் பாடல்கள் எரிச்சலை உண்டுபண்ணுகிறது.
டீ.வியில் இந்த டூயட் பாடல்கள் ஒளிபரப்பப்படும் போது ஒலியைக் குறைத்துவிட்டு பார்த்தால் போதை ஏறிய இரண்டு குரங்குக் குட்டிகள் ஆடுவது போல தோன்றுகிறது.
இதை மற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் “முள்ளும் மலரும்” படத்தில் பின்னணி இசையாக அமைத்து தருமாறு மகேந்திரனிடம் கேட்டேன், அவரும் ஒப்புக் கொண்டார்.
வழக்கமாக காதலர்கள் என்ன செய்வார்கள் என்று காண்பித்தால் மட்டும் போதுமானது.
நான் எனது படங்களில் காதல் காட்சிகளை எவ்வாறு எடுப்பேனோ அது போலவே “அங்காடித்தெரு” படத்தில் வசந்தபாலனும் செய்துள்ளார்.
“வெயில்” எனும் அவரின் முதல் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
“அங்காடித்தெரு” படமும் எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக அமையும் என நம்புகிறேன் ” என தெரிவித்தார்.
No comments:
Post a Comment