Saturday, 12 November 2011

மின்னல் வேக ரயிலெல்லாம் வந்தாச்சு. ஆனாலும் கட்டை வண்டி பயணத்திலும் ஒரு சின்ன சுகம் இருக்கிறதல்லவா? காட்சிகள் நகர்வதிலிருந்து கேமிரா சுழல்வது வரை அத்தனையிலும் ஒரு நிதானம். ஆனாலும் இது பாலுமகேந்திராவின் படம் என்பதை பார்த்த மாத்திரத்திலேயே புரிய வைக்கிற அழகு! 

இளவயசு குறும்புகள் எல்லை மீறினால் என்னாகும்? இதை காதல் என்ற நூலில் கோர்த்து மாலையாக தொடுத்திருக்கிறார் பாலுமகேந்திரா. 

அப்பாவும், அம்மாவும் ஊருக்கு போய்விடுகிறார்கள். தனிமையில் தனுஷ். காலிங்பெல் ஒலிக்க கதவை திறந்தால் சந்தனச்சிலையாக ப்ரியாமணி. ÔÔஅம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அதான் வேலைக்கு என்னை அனுப்பிச்சாங்க...ÕÕ டயலாக் முடிந்த அடுத்த வினாடியே என்ன நடக்க போகிறது என்பது புரிகிறது. இருவரின் உடலிலும் ஏற்படுகிற வேதியியல் இம்சைகள் இருக்கிறதே... அது பச்சை பசேல் பாலுமகேந்திரா ரகம். 

உங்கப்பா உன்னை அடிக்கிறத பார்த்துட்டு என் பாவாடையிலேயே ஒண்ணுக்கு போயிருக்கேன். -இது ப்ரியாமணி. 

அதான் நீ என்னை கிராஸ் பண்ணி போகும்போதெல்லாம் மூத்திரவாடை அடிச்சுதா? -இது தனுஷ் 

வசனங்களில் யதார்த்தம் இருக்க வேண்டியதுதான். அதற்காக....? 

அங்கங்கே வழிகிற குறும்புகளையும் பாராட்டியே ஆக வேண்டும். சிறுசுகள் இரண்டும் கள்ளத்தனமாக காதலை தொடர்ந்து கொண்டிருக்க, ÔÔஇந்த காப்பியை அண்ணன்கிட்ட கொடுÕÕ என்று அம்மா சொல்கிற போது தியேட்டரே கலகல! 

ஒரே ஒருநாள் லாக்கப் வாசம். வாழ்க்கையையே பறி கொடுத்துவிட்டு தவிக்கிறார் தனுஷ். இயக்குனர் கையில் தன்னை களி மண்ணாக ஒப்படைத்துவிட்டு இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்தமைக்காக பாராட்டலாம். அம்மாவின் மரணத்தை அழுத்தத்தோடு எதிர்கொண்டு சிறைக்குள் வந்த பின் கதறுகிறாரே... நெஞ்சை உலுக்குகிற வலி. 

அந்த சிறைச்சாலைக்குள் நம்மை கவர்கிற இன்னொரு நபர் கருணாஸ். தன் கானா குரலில் அவர் பாடுகிற அந்த பாடல் உயிரை உருக்குகிறது. 

மேக்கப்பே இல்லாவிட்டாலும் தேவதை போலிருக்கிறார் ப்ரியாமணி. கவர்ச்சியை காட்டி கவர்ந்தாலும், நடிப்பில் குன்றிமணி அளவுகூட குறை வைக்கவில்லை இந்த ப்ரியாமணி. 

கடைசி சில நிமிடங்களில் தலை காட்டுகிற சண்முகராஜா, ஒரு கொலை குற்றவாளியை தப்பவிடுகிற காரணம் நம்பும்படியாக இல்லை. ஆனாலும் மிடுக்கான போலீஸ் ஆபிசர். 

சோக காட்சிகளில் வம்படியாக பாட ஆரம்பித்துவிடுகிறார் இளையராஜா. எத்தனை படங்களுக்கு இதையே கேட்பது? போர்... ஆனால் பின்னணி இசை மட்டும் வழக்கம்போலவே ஜோர்! 

முதன் முறையாக அகல திரையில் ராஜாங்கம் நடத்தியிருக்கிறார் பாலுமகேந்திரா. 

பாலுமகேந்திராவின் படங்கள் மனசுக்குள் புகுந்து உணர்வுக்குள் கலகம் விளைவிக்கும். ம்ம்ம்... Ôஅது ஒரு கனாக்காலம்!Õ 

No comments:

Post a Comment