பாலுமகேந்திரா: படைப்புக்கள் குறித்து
கேள்விகள்: யமுனா ராஜேந்திரன்
கேள்விகள்:காத்திரமான படங்களாக எடுத்துக் கொண்டிருந்த நீங்கள் சதிலீலாவதியையும் கோகிலாவையும் ராமன்
அப்துல்லாவையும் நகைச்சவைப் படங்களாக எடுத்தீர்கள். அதற்கு விஷேசமான காரணங்கள் அல்லது
சூழ்நிலை ஏதாவது இருக்கிறதாக நினைக்கிறீர்களா?
பாலு: இயல்பாகவே சின்ன வயசிலிருந்தே எனக்கு நகைச்சுவையுணர்வு அதிகம். சாவு
வீட்டுக்குப் போனாலும், அங்கே எதையாவது பார்த்துச் சிரிப்பு வரும். நான் கஷ்டப்பட்டு
சிரிப்பை அடக்கிக் கொள்வேன். என்னுடைய அப்பா ஒரு அற்புதமான நகைச்சுவை உணர்வாளர். நிறைய
ஆட்கள் வந்து என்னுடைய படங்களைப் பார்த்துவிட்டு, நான் ரொம்ப சீரியஸ்ஸான ஆள் என
நினைக்கிறார்கள். எனது வாசிப்பினாலும், எனது சிந்தனையினாலும் நான் ஒரு சீரியஸான
மனிதனாக இருக்கிறேன். ஆனால் எனக்குள் அற்புதமான நகைச்சுவையுணர்வு இருக்கிறது.
சதிலீலாவதியை எனக்கு முழுக்கப் பிடித்தது.. கோகிலாவில் கூட பார்த்தீர்களானால்,
வாழ்க்கையில் காமெடி என்பது எல்லா அம்சங்களிலும் இருக்கிறது என்பதைக் காண்பித்திருப்பேன்.
கேள்விகள்:ராமன் அப்துல்லாவில் சிவகுமார் காரெக்டர் முஸ்லிம் காரெக்டராக வருகிறது. அதை நீங்கள்
பிரக்ஞைபூர்வமாக அப்படிச் தேர்வு செய்தீர்களா?
பாலு: ஆமாம், அதை முஸ்லிம் பாத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது நான்
பிரக்ஞைபூர்வமாக எடுத்த முடிவுதான். அந்தப் பாத்திரம் பேசுகிற வசனங்களெல்லாம் முஸ்லிம்
சமூகத்தில் இருந்து வர வேண்டும், அவர்களுடைய சொல்லாக இருக்க வேண்டும் எனப்
பிரக்ஞைபூர்வமாகச் செய்ததுதான். ஆனால் தமிழ் சினிமாவில் முஸ்லிம் பாத்திரத்தை ஸ்ட்ராங்காகச்
சொன்ன படம் இது. முன்னேயெல்லாம்; முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தித்தான் படங்கள்
வந்திருக்கிறது என்கிறதெல்லாம் நீங்கள் சொன்னபடி முக்கியமான விஷயங்கள்தான்.
கேள்விகள்:அதிகாரவர்க்கத்தை அற்புதமாகத் திரைவிலக்கம் செய்த படங்களில் வீடு ஒரு முக்கியமான படம்.
பாலு: ஆமாம், அதில் ரொம்ப ரொம்ப நான் பிரக்ஞைபூர்வமா இருந்தேன். அந்த விஷயம் பற்றி,
குறிப்பா பிரக்ஞைபூர்வமா இருந்தேன்.. வீடு ஸ்கிரிப்ட் என்னுடைய சொந்த வாழ்க்கையிலிருந்து
வந்தது. அந்த ஸ்கிரிப்டில், எல்லாச் சின்னச் சின்ன உணர்ச்சிகள் எல்லாமுமே எனக்குத் தெரியும்.
எதை எதை எல்லாம் வைத்துக்கொள்வது என்பதை விடவும், எதை எதை எல்லாம் விட்டுவிடுவது
என்பதில்தான் நான் ஜாக்கிரதையாக இருப்பேன். என்னுடைய எட்டு ஒன்பது வயதில், என்னுடைய
அம்மா வந்து வீடு கட்ட ஆரம்பித்தார்கள்.. என்னுடய அம்மா வந்து ஒரு அன்பான சந்தோஷமான ஒரு
மனுஷி. எங்க அப்பா ஒரு கொடுத்து வச்ச மனுஷன்.. நல்ல படிப்பாளி.. அவருடைய
தமிழிலக்கியமும் அவருடைய கணிதமும் ஒரு நிஜமான பொருத்தம். வீடு கட்ட ஆரம்பித்த பிறகு,
ஒரு நாள் எங்கள் அம்மா தனியாக அழுது நான் பார்த்திருக்கிறேன்.
கேள்விகள்:வீடு படத்துல வீடு கட்டுகிற அந்த ஆண் பெண்ணுக்கிடையிலான உறவை ரொம்ப இயல்பாகவும்
நாகரீகமாகவும் அற்புதமாகச் சித்தரித்திருந்தீர்கள்.
பாலு: இது சம்பந்தமாக உங்களுடைய உணர்ச்சிகளை என்னோடு பகிர்ந்து கொள்கிறதில் நான் அதி
சந்தோஷப்படுகிறேன். அந்த வீடு படத்தில வருகிற கதாநாயகனுக்கும் கதாநாயகிக்குமான காதல்
வந்து, மிக மிக ஆழமான அழுத்தமான காதல். ஆனால் நான் லவ் பண்றன்னோ, நான் காதல் பண்றன்னோ
சொல்லுகிற, அது வரைக்கும் காண்பிக்கப்பட்டு வந்த, இப்பவும் சினிமாவில்
காண்பிக்கப்பட்டுவருகிற எந்த விதமான சமாச்சாரமும் என் படத்தில் இல்லை. ஆனால் ஒரு வகையில்
அது படத்தில் நடைமுறையில் இருக்கிறது. நிஜமாகயிருக்கிறது. எத்திராஜ் காலேஜூ பெண்கள்
காச்சு மூச்செனக் கத்தத் தொடங்கிவிட்டார்கள். எப்பிடி ஸார் நீங்க அப்பிடிப் பண்ணலாம்? எப்பிடி
விட்டுட்டுப் போலாம்? என்றார்கள். நான் இதைத் தான், இந்தக் கோபத்தைத்தான் விரும்பினேன், என
அப்போது சொன்னேன். கோபப்படுமாறு அந்த வலி உங்களைத் தாக்கியிருக்கிறது. இதைத் தான் நான்
எதிர்பார்த்தேன்..
இதைத் தவிர எனக்கு வேறு எந்த முடிவுமே உடன்பாடாகத் தெரியவில்லை. அதனால்தான் அப்படி
முடிவை வைத்தேன் என்றேன்...
கேள்விகள்:சந்தியாராகம் கதையை நீங்கள் எப்பிடிக் கருக்கொண்டீர்கள்?
பாலு: அந்தக் கதை எனக்குள் வந்தபோது, நான் மூப்பு எய்துவதற்காகப் பயந்து கொண்டிருந்தேன்.
இப்பவும் கூட முதிர்ச்சியடைவதற்கு நான் பயப்படுகிறேன். மனத்தளவில் முழுமையாக வளர்ச்சி
எய்துவதற்கு எதிராக, நான் மூப்பெய்துவதற்கு எதிராக மறுக்கிறேன். இருபத்தஞ்சு
இருபத்தாறு வயதிலிருக்கிற மாதிரி என்னை நான் நினைக்கிறேன். அந்தப் பக்கமான மன
உலகத்துக்கு நான் போனேன். அதை நான் உணர்ந்தேன். இளைய மனிதர்களோடு நான் இயங்கினேன். ஆனால்
சில சமயங்களில் நான் சோர்வை உணர்கிறேன். நேர்த்தியாக, சிரமமேயில்லாமல் நான் முதிர்வயது
அடைவது என்பது எனக்கு என்றுமே இருக்காது. நான் வருங்காலத்தில் மூப்பெய்துவேன் அல்லது
ஏற்கனவே மூப்படைந்து விட்டேன் என்பதாகத்தான் இருக்கும்.
கேள்விகள்:சந்தியா ராகத்தில் கடைசி சீனில், ஆண்வழிச் சமூக மதிப்பீடுகளுக்குத் திரும்பிப் போகவேண்டி
இருக்கிறது என்கிற மாதிரி நீங்கள் சொல்கிறீர்கள்.. ஆனால் கதையில் நீங்கள் தேடிக்கொண்டு
போகும்போது தாய்வழிச் சமூகத்தினுடைய பொறுப்புணர்வுதான் இருக்கிறது. ஆனால் கடைசியில்
அந்தப் பெரியவர் குழந்தையினுடைய குறியைப் பார்த்து, அது ஒரு ஆண் என நினைத்து அவர்
சந்தோஷப்படுகிறதைக் காண்பிக்கிறீர்கள். எப்படி இந்த முரண்பாடு வந்தது?
பாலு: என்னுடைய பார்வையில் முரண்பாடு இல்லை. இருக்கிற பார்வைகளைக் காண்பித்தேன்.
கருத்தியல் ரீதியில் ஒரு குடும்பத்தில் ஒரு வயதானவருக்கு ஏற்படக்கூடிய முதுமையை, அந்த
குடும்பத்தைச் சார்ந்த ஒரு இளைய ஆண் எதிர்கொள்வதில்லை. ஒரு இளைய பெண் வந்து
நாகரீகமாகவும் புரிதலோடேயும் அங்கு அதனை எதிர்கொள்கிறாள் என்கிறது என்னுடைய கருத்தியல்
நிலைபாடு. ஆனால் இந்த ஆண் வந்து, இந்த முதுமையை எய்தினாலும், இந்தத் தன்னுடைய
முதுமைக்கு இந்தப் பெண்தான் அனுசரனையாக இருக்கிறாள் என்று தெரிந்தாலும், இன்னும் அவர்
வந்து ஆணாதிக்கத்திலிருந்து விடுபடாத ஒரு சூழலில்தான் அவர் இருக்கிறார் எனக்
காண்பித்திருக்கிறேன்.
இன்றைக்கும் அவருக்கு, பிறக்கிறது ஒரு ஆண் குழந்தையாக இருந்தால் சந்தோஷந்தான்.
கேள்விகள்:திருமணம் கடந்த உறவு வந்து உங்களுக்கு ஒரு உலுக்குகிற பிரச்சினையாக இருந்திருக்கிறது
என்பது தெரிகிறது.. நான்கு படங்களில் நீங்கள் அது பற்றி மட்டும் பேசியிருக்கிறீர்கள்.
ரெட்டைவால் குருவி, இது சம்பந்தமாக இரண்டுதார மணத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என
இடதுசாரி வட்டாரங்களில் குற்றச்சாட்டு கூட இருந்தது. அப்புறம் ரேவதியுடன் மறுபடியும்
படம் எடுத்தீர்கள், இது மஹேஷ்பட் படத்தினுடைய ஆதர்ஷம் என்றாலும் இதில் ரெட்டைவால்
குருவியினுடைய இன்னொரு பரிமாணதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதில் கொலை
செய்துவிட்டு சிறைக்குப் போன வேலைக்காரியின் குழந்தைக்கு ரேவதி பொறுப்பேற்பதும்
தன்னுடைய கணவணை நிராகரிக்கறதுமான முடிவை வன்முறையின் அழகியல் எனச் சொல்லலாம்.
அதுக்கப்புறம் கமல்ஹாஸனோடு சதிலீலாவதி செய்தீர்கள். அதில் கலகம் செய்கிற பெண்ணைக்
காண்பித்தீர்கள். இடையில மலையாளத்தில் ஓளங்கள் செய்தீர்கள்..
இந்தப் படங்களைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயங்களை ஒப்பீட்டு அளவில் சொல்லுங்கள்.
ரெட்டைவால் குருவியில் நான் வேறு மாதிரி சிந்தித்தேன். சாதாரணமாகத் தமிழ்ப்படங்களில்
இந்த மாதிரி வரும்போது, தற்கொலை செய்து கொள்வார்கள். அல்லது வீட்டை விட்டு, பிரச்சினையை
விட்டுப் போய்விடுவார்கள். என்னுடைய படத்தில் இயல்பாக இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டால்
எப்படி இருக்கும் எனச் சிந்தித்தேன். சதி லீலாவதியில் அந்தப் பொண்ணு கலகம் செய்கிறாள்.
ஆனால் அவன் திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறாள்.
ஆனா மறுபடியும் படத்தில் அவள் ஏற்றுக் கொள்வதில்லை. நீ நினைத்தபோது போகிறதுக்கும் வந்தால்
ஏற்றுக்கொள்வதற்கும் முடியாது என அவள் அவனை மறுத்து விடுகிறாள். தனியாக வாழமுடியும்
என்பதனை உறுதியாகச் சொல்கிறாள். ஒரே பிரச்சினையினுடைய பல்வேறு கோணங்கள்தான் இந்த
மூன்று படங்களிலும் வெளிப்பட்டிருக்கிறது. நான் இந்தப் படங்களில் இருதார மணத்தை
ஆதரிக்கவில்லை. ஆனால் இப்படியான சூழலில் வாழ நினைக்கிறபோது ஏற்படுகிற விஷயங்களைத்தான்
நான் வேறு வேறு விதமாகச் சித்தரித்திருக்கிறேன்.
கேள்விகள்:உங்களுடைய படங்களில் ரொம்ப தனித்துவம் வாய்ந்ததாகவும் ரொம்ப ஒருமையானதும் உங்களைத்
திருப்திப்படுத்தியதும் ஆன படம் என்று எதைச் சொல்வீர்கள்?
பாலு: எனக்கு இந்த இரண்டு படங்கள், வீடு, சந்திய ராகம் அதிகம் பிடிக்கும். தயக்கத்தோடு
நான் அழியாத கோலங்களையும் இதனுடன் சேர்த்துக் கொள்ள நினைக்கிறேன். பிற படங்களோடு
பார்க்க, இந்த மூன்று படங்கள்தான் எனக்கு என் படங்களில் அதிகம் திருப்தியைத் தந்த படங்கள்..
இரண்டு காரணங்கள். குறைந்த சமரசங்கள் ஒரு காரணம். இன்னொரு காரணம் குறைந்த தவறுகள்.
இரண்டாவது காரணத்தை நான் சினிமா உருவாக்குவது தொடர்பான இலக்கணம் சார்ந்து சொல்கிறேன்.
இது வந்து நான் தெரிந்திருக்கிற, எனக்கு மட்டும் அதிருப்தி தருகிற விஷயங்கள். இந்தக்
காரணங்களால் இந்த மூன்று படங்களையும் எனக்குப் பிடிக்கும்.
கேள்விகள்:உங்களுடைய மூன்றாம் பிறை, பாலாவினுடைய சேது, இந்த இரண்டு படங்களையும் பார்க்கும் போது
ஒரு ஒப்பீட்டு அளவிலான ஒரு கேள்வி வந்தது. மூன்றாம் பிறை படத்தில் மனப்பேதலிப்பு அல்லது
நினைவு மறப்புக்கு நீங்கள் இயற்கை வைத்தியரிடம் கதாநாயகியைக் கொண்டு போகிறீர்கள். அதே
மாதிரி சேதுவில் மனம் பேதலித்தற்கு இயற்கை வைத்தியத்துக் கதாநாயகன் போகிறான். இந்த
இரண்டு படங்களிலும், இந்தக் காட்சிகள் ரொம்ப விஸ்தாரமா இருக்கிறது. பாலா உங்களுடைய மாணவர்.
இப்போது அவரவர்கள் கலாச்சாரம், மற்றும் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட வைத்திய முறைகள்
சம்பந்தமான புரிதல் கூடிக்கொண்டு வருகிறது. எங்களுடைய பரிணாமத்தோடு
சம்பந்தப்படுத்தியும் பார்க்கப்படுகிறது. இப்படி இயற்கை சார்ந்த பார்வை உங்களுக்குள்ளயே
இருக்கிறதா? இந்த நம்பிக்கை, இயற்கை வைத்தியத்தின் மேலான ஈடுபாடு உங்களுக்கு
இருக்கிறதா? உங்களுடைய பாதிப்பில்தான் இந்த விஷயங்கள் பாலாவினுடைய படத்திலேயும்
அழுத்தமாக வந்திருக்கிறதோ எனத் தோன்றுகிறது.
பாலு: இல்லையில்லை. பச்சிலை வைத்தியம் மூன்றாம் பிறையில் இடம்பெற ஒரே ஒரு காரணம்தான்.
நான் ரொம்ப நேர்மையாகச் சொல்கிறேன். இந்த அம்னீசியா, அதாவது மனித நினைவுகளிலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் மறந்து போவது, மூன்றாம் பிறையில் வந்து, அந்த ஞாபக
மறதி நோய் வந்து ஒரு சாட்டு எனக்கு. என்னுடைய இந்தப் படத்தை உருவாக்குவதில் என்னுடைய
பிரதான நோக்கம் என்வென்றால், இந்தப் பெண்ணாகவும் குழந்தையாகவும் இருக்கிற கற்பிதம்,
குழந்தை: பெண் என்கிற கற்பிதம், உலகிலுள்ள எல்லா ஆண்களுக்கும் இது இருக்கிறது. அவள்
பாலுறவுக்கு உகந்த உடலமைப்போடு, மனதளவில் ஒரு குழந்தையாக இருக்கவேண்டும் என்கிற
கற்பிதத்தை படத்தில் சொல்வதுதான் என் நோக்கம்.. இது வந்து பிரபஞ்சம் தழுவி ஒப்புக்
கொள்ளப்பட்ட ஆண் கற்பித உணர்வு.. இதைத்தான் நான் மூன்றாம் பிறையில் காட்டினேன். அதாவது
ஒரு வளர்ச்சியடைந்த ஆணுக்கும் பாலுறவு ஆர்வமூட்டும் ஒரு பெண் குழந்தைக்கும் இடையிலான
உறவு. இது தான் வந்து அடிப்படைக் கரு. இந்த ஞாபக மறதி வந்து ஒரு சாட்டு.
எதுக்கு நான் பச்சிலை வைத்தியத்தை மூன்றாம் பிறையில் கொண்டு போனேன் எனறால், அது பச்சிலை
வைத்தியத்தை நம்புனதால் அல்ல. அது அடிமனத்தில் எனக்குள் இருந்ததால் அல்ல. இந்த
ஞாபகமறதிக்கு சிகிச்சை என்ன என்பதனை கொஞ்சம் விசாரித்துப் பார்த்தேன். அதற்கு உளவியல்
சிகிச்சை, உளவியல் பகுப்பாய்வு மருத்துவமனை, அது இது எல்லாம் சொல்லிக்
கொண்டிருந்தார்கள். என்னுடைய கதை நகரும் தளம் ஊட்டியில் ஒரு கிராமம். இந்தக் கிராமத்தை
விட்டு நான் வெளியே போக விரும்பவில்லை. இதனை இதற்குள்ளயே முடிக்கவேண்டும்.
அந்தவிதமான சூழலில் ஒரு காட்சிருப மாற்றமும், விஷூவல் ஜெர்க்கும் நான் கொடுக்க
விரும்பவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அந்தப் பகுதியை நான்
முடிக்க விரும்பினேன். என்னுடைய நோக்கமென்னவென்றால், அவளுக்கு ஞாபகசக்தி திரும்பி
வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? அது ஹோமியோபதி என்றால் அதற்கு எங்கெங்கேயோ போகவேண்டும்.
நகரத்தில இருக்கிற மருத்துவமனையில் உளவியல் சிகிச்சையாளர்கள் இருக்கிறார்கள்.. இல்லை.
எனக்கு இதுவெல்லாம் வேண்டாம். யாரோ பச்சிலை வைத்தியர் இருக்கிராறாம் எனத் தந்திரமா அதைச்
செய்து முடித்தேன். இது என்னுடைய நம்பிக்கை அல்ல... இப்போதும் அந்தப் பச்சிலை
வைத்தியத்தில் எனக்கு நம்பிக்கையில்லை..
கேள்விகள்:நீங்கள் உங்களுக்குப் பிடித்த படங்கள் எனச் சொல்லும்போது, ஏன் இரண்டு படங்களை மட்டும்
சொல்கிறீர்கள்- வீடு, சந்தியா ராகம்- ஏன் அழியாத கோலங்களை அதனோடு சேர்த்துச்
சொல்லமுடியாமல் இருக்கிறது?
பாலு: ஏனென்றால், நான் அழியாத கோலங்களை மற்ற இரண்டு படங்களோடு ஒப்பிடும்போது கொஞ்சம்
அதிகம் சமரசம் பண்ணியிருக்கிறேன். இரண்டு பாட்டு வைத்திருக்கிறேன் டைட்டில் சாங் ஒன்று
மற்றது கோல நெஞ்சம் எனும் பாட்டு. அந்தச் சமயத்தில் எனக்கு அந்தப் பாட்டு தேவையாக
இருந்தது. அழியாத கோலங்கள் நான் ரொம்பவும் ஈடுபட்டுச்செய்த படங்களில் ஒன்று. அனைத்தும்
கிளைக் கதைகள். நேரடியில்லாத கதை என்று ஒன்றுமே அதில் இல்லை. சுத்தமாக ஒன்றுக்கொன்று
தொடர்புள்ள கிளைக் கதைகள். ஒரு டீச்சர் வந்து ஒரு கிராமப் பள்ளிக்கூடத்துக்குப்
பொறுப்பேற்றுக் கொள்கிறார். அந்த நாளில் இருந்து, குளிக்கப் போகிற அந்தப் பையன் இறந்து
போகிறான் என அது வரைக்கும். ஆனால் அந்தக் காலத்தில அது முழுக்கவும் சுயசரிதைப் படம்..
நான் காசியானந்தன் எல்லாம்தான் அந்தப் பாத்திரங்கள்.
அந்தப் படத்தில் என்னுடைய பின்னோக்கிய நினைவுகளைத்தான் தொகுத்துக் கொண்டேன். துண்டு
துண்டாகத்தான் அதை நான் மறுபடி சேர்த்துக் கொண்டேனே அல்லாமல், நான் கதை சொல்ல வரவில்லை.
அந்த அனுபவங்கள் எனக்கு நேர்ந்ததனாலே அந்த அனுபவங்கள் உங்கள் அனுபவமாகவும் ஆகிற சாத்தியம்
இருக்கிறது. நீங்கள் அதில் உங்களை சம்பந்தப்படுத்திக் கொள்ள முடியும். படம் 365 நாட்கள்
போனது. இப்போது சில பேர் அப்போது இப்படியொரு படம் வந்திருக்கிறதா எனப் பிரமித்துப்
போகிறார்கள்.
கேள்விகள்:இலக்கிய விமர்சகர் எம் ஏ. நுஹ்மான் கூட தனக்குப் பிடிச்ச படங்களில் அழியாத கோலங்கள் ஒன்று
என என்னுடனான நேர்ப்பேச்சில் சொன்னார்.
பாலு: அவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். நான் என்ன சொல்ல வருகிறேன் என அவருக்கு விளங்கும்..
அந்த மண்ணோடு சம்பந்தப்பட்ட படம் அது. மற்றவர்களைக் காட்டிலும் அவர் அந்தப் படத்தோடு
அதிகமாகத் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும்..
கேள்விகள்:இது வந்து ஒரு உலகம் தழுவிய விஷயம்.
பாலு: படத்தில் நான் படு பயங்கரமான பாதைகளில் எல்லாம் பயணம் செய்தேன்.. பசங்களை வச்சு
படமெடுன்றான். நிரோத்த எடுத்து பறக்கவிட்டுட்டுப் போறான். இத நா எப்பிடிச் சொல்லுவேன்.
அந்தக் குறிப்பிட்ட காட்சியை நான் பண்ண விரும்பினேன். வித்தியாசமான பாணியில் செஞ்சேன்.
ஊர்வலம் போறாங்க. மறுபடி ஊர்வலம் போறாங்க. அக்கா மாதிரி, கொஞ்சம் தண்ணி குடுங்க
அப்படீங்கறாங்க. அந்தத் தண்ணி செம்ப வாங்கிக் குடிச்சிட்டு அந்த நிரோத்த பலூனா ஊதிட்ட
வர்ராம் பாருங்க. இத பலூனா ஊதலாமான்னு ஒரு பிரமிப்பா வரும் அந்தப் படத்தில்.
கேள்விகள்:இப்போது இருக்கிற சினிமாவில் உங்களுடைய படங்களில் பல்வேறு ஆட்கள் பலமான அம்சம் என
நினைக்கிறதே உங்களுயை பாட்டுக்கள்தான். உங்களது பாட்டுக்கள் வந்து பின்னணியில்தான் வரும்.
அதில் நாயகன் நாயகி இரண்டு பேரும் வாயசைத்து டுயட் பாடுவதில்லை என்கிறது, நிலவுகிற
சினிமாச் சூழலில் வித்தியாசமான அணுகுமுறை.
பாலு: ஒரு காட்சியில் சுற்றிச் சுற்றி ஆடிக்கொண்டு பாடுவதை நான் வெறுக்கிறேன்.
இயற்கையாகக் காதலர்கள் இருக்கட்டும். பாட்டு பின்னாடி போகட்டும். இப்போது சண் டி.வி.யில்
காதல் பாட்டுகள் போகும்போது அந்த பாட்டினுடைய சவுண்டை நிறுத்திவிட்டுப் பாத்தீர்களென்றால்,
பாட்டைக் காட்சிப்படுத்தியிருக்கிறதைப் பாருங்கள். முட்டாள்தனம். துணி போட்ட நீலப்படம்

No comments:
Post a Comment