Wednesday, 16 November 2011

வயசாயிடுச்சுல..’ :பாலுமகேந்திரகலகலWed Nov 18, 2009 11:21 am

ஸ்டோர்ஸ் ஆன் டோர்ஸ். இயக்குனர் வெற்றிமாறனின் உறவினர் வெங்கடேஷ் தொடங்கியிருக்கும் ஆன் லைன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ். ஷாப்பிங் செல்வதால் வீணாகும் நேரம், டென்ஷனை குறைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது இந்த வர்த்தகமுறை.

வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் ஸ்டோர்ஸ் ஆன் டோர்ஸ் நிறுவனத்தை இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா தொடங்கிவைத்தார். முதல் விற்பனையை இயக்குனர் வெற்றிமாறன் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் பாலுமகேந்திரா பேசியதாவது:-

“ காலம் நிறைய மாற்றங்களையும், வளர்ச்சிகளையும் பார்க்கும்போது நான் மிகவும் பின்தங்கி விட்டேனோ என்று தோன்றுகிறது. வயசாகிவிட்டதும் அதற்கு காரணமாக இருக்கலாம். ஒருநாள் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக டிபார்ட்மென்டல் ஸ்டோருக்கு சென்றேன். தக்காளி, வெங்காயம்,பச்சைமிளகாய் வாங்கிக்கொண்டு பில் போடும் இடத்திற்கு நகர்ந்தபோது சினிமா படங்களின் டி.வி.டிக்களையும் வைத்திருந்தார்கள். அதில் ஒரு ஹாலிவுட் படத்தின் டிவிடியை எடுத்து மளிகை பொருட்களுடன் போட்டுக்கொண்டேன். நான் எடுத்துவந்த அதே படத்தை 35 கிலோ மீட்டர்கள் சைக்கிள் மிதித்து சென்று பார்த்துவந்த அனுபவமும் உண்டு. ஆனால் இன்றைக்கு அதே படம் எவ்வளவு சுலபமாக கிடைக்கிறது என்பதற்காகத்தான் இதனை சொன்னேன். நாளுக்கு நாள் வளர்ச்சிகளை சந்தித்து வருகிறோம். அந்தவகையில் இந்த ஆன் லைன் வர்த்தகமும் மக்களுக்கு உதவியாக இருக்கும்” என்றார்.

No comments:

Post a Comment