பாலுமகேந்திரா: ஒளிப்பதிவுக் கலையும் நிறங்களும்
கேள்விகள்: யமுனா ர
கேள்விகள்:நிறங்கள் எனப் பார்ப்போம். நிறங்களுக்கும் பல்வேறு உணர்ச்சிகளைப்
பிரதிநிதித்துவப்படுத்துகிற அர்த்தம் இருக்கிறது.. இரண்டு படங்களை நான் உதாரணமாகச்
சொல்லலாம். ஒன்று வைசாலி. வைசாலியில் அந்த வறட்சியான வெக்கை. பரதன் அதில்
முக்கால்வாசிப் படத்தில் நெருப்பு நிறத்தைப் பாவித்திருப்பார். அந்த மழை பெய்த பிறகு
படத்தினுடைய நிறமே முற்றிலும் மாறிப் போய்விடும்..
அதே மாதிரி இரண்டாவது மைக்கேல் டக்ளஸ், கேதரின் ஜெட்டா ஜோன்ஸ் நடித்த /Traffic/ என்று
ஒரு படம். அந்தப் படம் மூன்று புவியியல் பிரதேசங்களில் நடக்கிறது.. படத்தின்
சொல்நெறியும் மூன்று விதமான நிறங்களில் வித்தியாசப்படுத்திப் பண்ணப்பட்டிருக்கும்.
ஆகவே நிறத்துக்கும் அந்தக் கதை நடக்கிற இடத்துக்கும் மனுஷர்களுடைய உணர்வுகளுக்கும்
தொடர்பு இருக்கிறது. நிறம் சம்பந்தமான உங்களுடைய பிரக்ஞைபூர்வமான நோக்கு என்ன?
பாலு: பரதனுடைய வைசாலியைப் பத்திச் சொன்னபோது நான் ரொம்பவும் சந்தோஷப்பட்டேன். நீங்கள்
அதனைக் கவனித்திருக்கிறீர்கள்.. அவருடைய இரண்டு படங்களில் நான் ரொம்பப் பிரக்ஞைபூர்வமா
வேலை பண்ணயிருக்கிறேன். பரதனை எனக்குத் தெரியும்.. பரதன் வந்து ரொம்பவும் எதிரெதிர்
விளைவுகளை உண்டாக்கக் கூடியவர். அவர் என்னுடைய நண்பர். பரதனுடைய முதல் படமான
பிரயாணத்துக்கு நான்தான் ஒளிப்பதிவு செய்தேன். பரதன் ஒரு அற்புதமான ஓவியர். நிறங்களின்
சேர்க்கை குறித்த ஆழ்ந்த உணர்வு கொண்டவர்.. நிறம், ஒளி, நிழல் போன்றவற்றை அவர்
பிரக்ஞைபூர்வமாகப் பாவித்து வந்தார்.
என் விஷயத்தில் நான் வந்து நிறத்தையும் ஒளியையும் பின்னணிக் காட்சியையும் குறிப்பாக
நிறங்கள், மற்றது ஒளி பற்றிப் பொதுவாகச் சொல்வதாக இருந்தால், முடிந்த அளவு என் படங்களை
நான் நிறநீக்கமாக்க (decolourise) முயற்சி செய்கிறேன் என்று சொல்லலாம். எந்த அளவுக்கு
அந்த ஈஸ்ட்மன் கலரை மட்டும் தூக்கி தூரத்தில் போட்டுவிட்டு, இந்த ஈஸ்ட்மனை மட்டும் வைத்துக்
கொள்ளலாம் என நினைக்கிறேன்.
என்னதான் நீங்கள் நிறங்களைப் பற்றிச் சொன்னாலும் நிறங்கள் அலங்காரமூட்டுகிறது. கறுப்பு
வெள்ளையில் இருக்கக்கூடிய அந்த முழுமை கெடாமை, அந்த ஆழம், அதே காட்சியை வண்ணத்தில
எடுக்கிறபோது போய்விடுகிறது. ஒரு கறுப்பு வெள்ளையில் பார்க்கிறபோது இருந்த நேர்மையும்
ஆழமும் அதே படத்தை, அதே காட்சியை, அதே ஒளியில் வண்ணத்தில் எடுக்கும்போது இல்லாமல் போகிறது.
நிறங்கள் சம்பந்தமாக என்னுடைய அணுகுமுறை முடிந்தவரை நிறநீக்கம் ஆக்குவதாகத்தான்
இருக்கிறது. எப்பிடி நிறநீக்கம் செய்யலாம்? இயற்கையில் இருக்கிற சமாச்சாரங்களை நான்
ஒன்றும் செய்யமுடியாது. வீடுகளில் இருக்கிற சுவர் ஓவியங்கள், வண்ண உடைகள் போன்றன
பாத்திரத்தோடு சம்பந்தப்பட்டு இருக்கவேண்டும் என்பது என் விருப்பம். எந்தப் பார்வையாளனுக்கும்
நிறம் முதலில் உறுத்தக் கூடாது. எந்த வடிவத்திலும் அது பார்வையாளனை ஈர்க்கக் கூடியதாக
இருக்கக் கூடாது. இதுதான் சினிமாவின் பாலான எனது பொதுவான அணுகுமுறை.
பிரக்ஞைபூர்வமாகச் சில சமயங்களில் நிறங்களை உபயோகிக்கிறது உண்டு. ஒளியையும்
உபயோகப்படுத்துவது உண்டு.
மறுபடியும் படத்தினுடைய ஆரம்பக்காட்சியை நீங்கள் எடுத்துக் கொண்டீர்களானால், மூன்று
நிமிஷங்களில் நான் பத்து லைட்டிங் மாற்றங்கள் கொடுத்திருக்கிறேன். அந்த மூன்று நிமிஷ
லைட்டிங் மாற்றம் முடிந்தவுடனே, அந்தக் காட்சி கறுப்புக்கு மெல்லப் போகும்.. ரேவதி ஒரு
பத்திரிக்கை படித்துக்கொண்டிருப்பார், அப்போது லைட்ஸ் போய்விடும். அந்த மின்சார விளக்கில்
இந்த அம்மா படித்துக்கொண்டிருப்பது ஒரு லைட். அந்த மின்சாரம் போனதும் இருட்டில், அதில்
கொஞ்சம் லைட் இருக்க வேண்டும், நீங்கள் பார்க்க வேண்டும். அப்புறம், அந்தம்மா எழுந்து போய்
விளக்கை ஏற்றிக்கொண்டுவந்துவிட்டு, வத்திப் பெட்டியைக் கொளுத்துகிறார்கள். இந்த வத்திப்
பெட்டி கொளுத்துகிற சமயத்தில் அதற்கொரு லைட். அதற்குள்ளாக இரண்டு சமாச்சாரம் வருகிறது.
விளக்கு திரியைத் தூக்கி இந்த விளக்கு எரிய ஆரம்பிக்கிற போது அது ஒரு லைட்டிங். இந்தத்
தீக்குச்சி அங்கே போகிறபோது இந்த முகத்தில் வரக் கூடிய ஒளி. அப்புறம் அந்தத் திரி
எரிகிறபோது ஒரு ஒளி. தூண்டுகிறபோது இன்னொரு ஒளி.
இதில் படித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு டெலிபோன் கால் வருகிறது. இந்த விளக்கை
எடுத்துக்கொண்டு அவர் உள்ளே போகிறார். இவர் விளக்கோடு ஒரு அறைக்குள் போனால், இந்த
விளக்கினுடைய ஒளி எங்கெங்கெல்லாம் படும் எனப் பார்க்க வேண்டும். இதனுடைய நிழல் எங்கே
இருக்குமோ, அங்கே அந்த விளக்கைக் கொண்டு போய்வைத்துவிட்டு போன் செய்கிறார். அப்போது அந்த
இயக்குனருடைய உதவியாளன் போன் பூத்திலிருந்து பேசிக் கொண்டிருப்பார். அங்கே இருட்டு.
வெளியே போக வர இருக்கிற கார்களினுடைய ஒளி. அவர் பேசிக் கொண்டிருக்கும்போது லைட்
வருகிறது. உள்ளே தொங்கிக் கொண்டிருக்கிற பல்பில் ஒரு ஸ்டார்ச் போய்விடுகிறது. அதுக்கான
ஒளி. டேபிளில் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. சிம்னியும் இருக்கிறது. அவர் லைட்டை
அணைத்துவிட்டு சாப்பாட்டு அறைக்குள் வந்துவிடுகிறார்..
அப்போது ஆட்டோ வருகிற சப்தம். அதிலிருந்து வருகிற வெளிச்சம். அந்த ஆட்டோ கேட்டுக்கு
முன்னாடி நிற்கிறது. இதற்குள் ஒரு பத்துப் பன்னிரண்டு நுணுக்கமான லைட்டிங் இருக்கிறது..
இதனை அந்தப் படத்தில் பிரக்ஞைபூர்வமாகச் செய்தேன். ஸ்கிரிப்ட்டில் இரவு ஒன்பது மணி.
சாப்பாடு ரெடிபண்ணி மேஜையில வைத்துவிட்டு உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கிறாள். அவன்
வந்தபிறகு அந்த லைட்டை அணைத்துவிட்டு படுப்பது என்றுதான் இருக்கிறது. அங்கேயொரு லைட்.
இவ்வளவுதான் ஸ்கிரிப்டில் இருக்கிறது. இது எனக்குத் திருப்தி ஆகவில்லை. காட்சிரூபமாக
மிக ஜாக்கிரதையான இருட்டுல இவைகள நான் செய்ய வேண்டும். இல்லையெனில், மெழுகுவர்த்தி
வெளிச்சமாக இருந்தாலும், எகிறுகிற பொருட்கள் எல்லாம் எகிறிவிடும். ஆகவே நிழல்மறைப்பு
(shades) சம்பந்தமாக நீங்கள் செலக்டிவாக இருக்க வேண்டும்..
கேள்விகள்:கதாபாத்திரத்திற்கும் காட்சிக்கும், அவர்களுடைய உணர்வுகளுக்குமான உறவைத் தொடர்புபடுத்தி
பரதன் தன்னுடைய பல்வேறு படங்களில் நிறங்களைப் பாவித்திருக்கிறார். அந்திசாயும் நேரத்தில்,
நடனக் காட்சிக்கு ஒரு சிவப்பு நிறம் கொடுத்திருப்பார். ஜெயபாரதியினுடைய இடையில்
மயிலிறகில் வருடும் போது, ஒரு வெளிர் நீல நிறம் கொடுத்திருப்பார்.. அவருடைய பல
படங்களில் இதனை அவர் பிரக்ஞைபூர்வமாகச் செய்கிறார்.
பாலு: நிறத்தை முக்கியக் கூறாக வைத்து, அந்தப் பாத்திரத்தினுடைய மன உணர்வுகளுக்கு ஒரு
மேலதிகமான பரிமாணத்தைக் கொடுப்பது தவறே இல்லை. நிச்சயமாக அப்படிச் செய்யலாம்.
Kurasovas Dreams என்கிற தன்னுடைய படத்தில் குரசோவா இப்படிச் செய்திருக்கிறார். அது
சுத்தமாக உளவியல் ரீதியானது. நிறங்களை உளவியல் அடிப்படையில உபயோகிப்பதும் அந்த
மாதிரியான ஒரு சமாச்சாரம், என்னுடைய படங்களில் பிரக்ஞைபூர்வமாக நான் செய்யவில்லை என
நினைக்கிறேன்.
நிறநீக்கம் பற்றி நான் சில விஷயங்கள் பேசவேண்டும். சொல்முறையாக அதாவது நேரேட்டிவ்வாக
ஒரு நிறத்தைப் பாவிப்பது (/colour as a narrative medium/) முதலாவது..
பாத்திரத்தினுடைய மனோநிலையைச் சித்தரிக்க நிறங்களைப் பாவிக்கிறது இரண்டாவது.
உதாரணமாக இரண்டு படங்களை நான் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். நிறநீக்கம் சில
சமயங்களில் ரொம்ப யதார்த்தமான சூழலை உருவாக்குகிறது. அதன் மூலம் பார்வையாளனை அது
காட்சிக்கு இன்னும் அருகாமையில் கொண்டு வருகிறது.
கேள்விகள்:உங்களுடைய சதி லீலாவதியில் சிலைகளுக்கு மத்தியில் ஹீராவும் ரமேஷ் அர்விந்தும் பாடிக்
கொண்டு போகிறார்கள். அக்காட்சியில் நன்றாகக் கவனித்தேன். உங்களுடைய நிறநீக்கம் எனும்
கருத்தாக்கம் அக்காட்சியில் மிக நன்றாகச் செயல்பட்டிருக்கிறது. அந்த மழை, பச்சை
இதையெல்லாம் பார்க்கும்போது ரொம்ப நெருக்கமாக உணர முடிகிறது. அந்த வகையிலான பாட்டு
ஒரு கற்பிதம்தான்.. எங்களுக்கு அது நன்றாகத் தெரிகிறது. ஆனால் அதைக் குறைந்த பட்சம்
யதார்த்தமாகச் செய்வது நீங்கள் சொல்கிற நிறநீக்கம்தான்..
அதே சமயத்தில் உயிரே படத்தில் ஒரு ஸீன்.. ஆல் இன்டியா ரேடியோவுக்கு மனிஷா கொய்ராலா
வேலை கேட்கப் போகிறார். இரண்டு கதவுகள். இரண்டு பக்கம். ஷாருக்கானும் மணீஷாவும்
நிற்கிறார்கள்.. இரண்டு பக்கமும் கதவு திறந்து, திறந்து, திறந்து மூடும். ஒவ்வொரு
முறையும் கதவு திறக்கும்போது, பல நிறங்கள் வந்து அவர்களுடைய முகங்களில் விழும். அந்தக்
கதவு திறக்கிறதிலும் அந்த அழுத்தமான, அடர்த்தியான நிறங்கள் முகத்தில் விழுவதிலும்
ஒருத்தருடைய கவனம் போகுமேயொழிய, கேரக்டர்களினுடைய நடவடிக்கையில் பார்வையாளனுடைய
கவனம் போகாது. காரணம் அடிக்கடி நொடிதோறும் மாறிக் கொண்டேயிருக்கிற அழுத்தமான
இளஞ்சிவப்பு, சிவப்பு, நீலம் என நிறங்கள் ஏற்படுத்துகிற திசைதிருப்பல்தான் காரணம்..
இப்போது நினைத்துப் பார்க்க, அங்கு என்ன உரையாடல் நிகழ்ந்ததென்பதே ஞாபகம் வரவில்லை. இந்த
நிறநீக்கம், மற்றது அடர்ந்த நிறங்கள், மற்றது வாழ்க்கையினுடைய யதார்த்தத்தை
பிரதிபலிக்கிறது என்கிறதையெல்லாம் வைத்துத்தான் இதனைச் சொல்கிறேன்.
இன்னொன்று, காமசூத்ரா படத்தினுடைய நிறங்கள், பாவிக்கப்பட்ட உடைகள் பற்றிச் சொல்லலாம்.
காமசூத்ரா படத்தில் பல்வேறு காட்சிகள், விபச்சார விடுதி மற்றது விலைமகளிர்
சம்பந்தமானதைச் சொல்லலாம். இந்தப் படத்தில் திரைச்சீலைகள், லைட்டிங் எல்லாமே அடர்ந்த
சிவப்பில்தான் காண்பிக்கப்பட்டிருக்கும். அதே மாதிரி நீல நிறத்துக்கும் காதல் சம்பந்தமான
மெலிதான உணர்ச்சிகளுக்கும் சம்பந்தமிருக்கிறது.
பாலு: நீங்கள் சொல்கிற விஷயத்தை நான் முழுக்க உணர்ந்திருக்கிறேன். என்னுடைய பயம்
என்னவென்றால், இந்த நிறம் வந்து தனக்குத்தானே ஒரு ஈர்ப்பைப் பார்வையாளனுக்குத் தருமென்றால்,
அதனால் நான் சொல்லவந்த விஷயம் வந்து எனக்கு நீர்த்துப் போய்விடுமோ என நான் பயப்படுகிறேன்.
நான் முழுக்க நிறங்களை விலக்குகிறேன்.. எந்த இடையூறும் இல்லாமல் ஒரு நிர்வாணமான
உரையாடலை நான் விரும்புகிறேன்.
கேள்விகள்: மழையைப் பாவித்த மூன்று படங்கள் பற்றிப் பார்க்கலாம். மூன்றாம் பிறையில் போலீஸ்
தேடிக்கொண்டு வருகிற காட்சி. காதல் கோட்டையில் வருகிற கடைசி நீண்ட மழைக்காட்சி. மற்றது
மணிரத்னம் படங்களில் வருகிற மழைக் காட்சிகள். உண்மையிலேயே உணர்ச்சிநிலைகளைக் காண்பிக்க
மழையை அற்புதமாகப் பாவிக்க முடியும். மழை வந்து ஒரு மொழி.. மழையை உங்களுடைய
படங்களில் என்ன மாதிரிப் பார்க்கிறீர்கள்?
மூன்றாம் பிறை கடைசி மழை ஸீன், இந்தத் தலைமுறையைச் சேர்ந்த என்னுடைய மருமகள்
பார்த்துவிட்டு உருகிப் பேசுகிறாள்.
பாலு: மூன்றாம் பிறை கடைசிக் காட்சியில் மழை நிஜமாகப் பெய்து கொண்டுதான் இருந்தது.
ஆனால் அந்தப் படத்தில் வருகிற மாதிரி நான் யோசித்துப் பார்த்திருக்கவில்லை. நான் சூட்
பண்ணத் தொடங்கியதும் மழை பெய்ய ஆரம்பித்தது. உடனடியாக ஒரு அதியற்புதமான விஷயம் எனக்கு
நேர்ந்து கொண்டிருக்கிறது என உணர்ந்தேன். அப்புறம் அந்தக் காட்சி முற்றிலும் வேறொரு
பரிமாணத்தில் வடிவமெடுத்தது. அந்த இரெயிலினால் அப்படி நேர்ந்தது.. தடுக்கி விழுந்து,
புரண்டு விழுந்து, எல்லோரும் குடை பிடித்துக்கொண்டு குறுக்கமறுக்க நடந்து போய்க் கொண்டு,
அந்தச் சூழ்நிலை உணர்ச்சி பூர்வமாக ஒரு நாடகமயமான பாதிப்பைத் தந்தது.
இந்தியில் மூன்றாம் பிறையை ஸத்மா எனும் பெயரில் செய்கிறேன். ஷூட்டிங் மே மாதம்.. வானம்
நீல வானம். மூன்றாம் பிறையில் மழை என்ன செய்தது என எனக்குத் தெரியும். இப்போது நாங்கள்
பிரக்ஞைபூர்வமாக மழையில் சூட் பண்ண விரும்பினோம். ஊட்டியில் மழையில் ஷூட் பண்ணுவதென்றால்
அவனவன் விறைத்துப் போய்விடுவான். செயற்கை மழையை போட்டுப் பார்த்தேன். கண்றாவியாக
இருந்தது. ஒரு அளவு வரைக்கும் தான் மழை தெரிகிறது. அப்புறம் அதற்கு அப்பால் நல்ல
வெய்யில். இதற்கு இயற்கையும் கொஞ்சம் ஒத்துழைக்க வேண்டும். அங்கே மழையிருக்காது.
ஜனங்களெல்லாம் தாராளமாக நடந்து போய்க்கொண்டிருப்பார்கள்.
வீடு படத்தில் மழையை நான் அற்புதமாக உபயோகித்தேன். அஸ்திவாரமெல்லாம் கட்டியாயிற்று. மழை
ஆரம்பித்து விட்டது. 10 லட்சத்தில் முடிக்க வேண்டிய ஒரு படம். என்ன செய்வது? மழை
பெய்கிறது. நான் சூட் பண்ணினேன். நான் அதை உபயோகப்படுத்தினேன். நான் முழு நகரத்தையும்
படம் பிடித்தேன்.. முழு நகரமும் ஒரு கேரக்டராக ஆகிறது.. அப்படியான ஒரு மனநிலையை
உருவாக்கினேன்.. நீங்கள் இயக்குனராக இருந்தால், நீங்கள் மழையை உபயோகிக்க வேண்டும். எதையும்
நீங்க உபயோகிக்க வேண்டும். படப்பிடிப்பு இடத்தில் அற்புதமான விஷயங்கள் நடக்கும். அந்தத்
தருணத்தில் அது எல்லாம் திணிக்கப்பட்டிருக்கிறது என்கிற ஒரு அபிப்பிராயத்தைப்
பார்வையாளர்களுக்குக் கொடுக்காமல், திரைக்கதையிலேயே இப்பிடித் தான்
எழுதப்பட்டிருக்கிறது, எனும் ஒரு பிரமையை அவனுக்குக் கொடுக்கிற அளவுக்கு நீங்கள் கலந்து
செய்து கொடுக்கிற ஒரு மேதமை உங்களுக்கு வேண்டும்.
கேள்விகள்:இப்போது சில படங்களில் எடிட்டிங் சில சமயங்களில் ரொம்பவும் விகாரமாக இருக்கிறதைப்
பார்க்க முடிகிறது.
சங்கர் படங்களிலேயும் மணிரத்னத்தினுடைய சில படங்களிலேயும் சில சமயங்களில் பாவிக்கற
நடனக் காட்சிகளில் இரண்டு அம்சங்களைப் பார்க்க முடியும். சில பாட்டுக்கள் நிறைய கற்பனை
ஆற்றலோடு தர்க்க உணர்வோடு எடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக இந்தியன் படத்தில்
பச்சைக்கிளிகள். பாட்டு. அலைபாயுதே படத்தில் பச்சை நிறமே பாட்டு இரண்டையும் சொல்லலாம்.
ஆனால் சில பாட்டுக்களும் எடிட்டிங் ஷாட்களும் விகாரம். உயிரே படத்தில் ஷோபியா ஹக்
வருகிற பாட்டு. இந்தியனில் முகமெல்லாம் நிறநிறமாக வரைந்து கொண்டு பாடுகிற பாட்டு.
இந்தப் படங்களில் வருகிற குளோசப் ஷாட்சும் நூற்றுக்கும் மேலான கட்களும் விநோதமான உணர்வை
ஏற்படுத்துகிறது.
பாலு: இப்போது வருகிற படங்களினுடைய பாட்டுக்கள் நிறைய எம்.டி.வி பாதிப்புக்குள்ளான
பாட்டுக்களாக இருக்கின்றன. சில பாட்டுகளில் சில ஷாட்டுகளை எதற்கு வைக்கிறார்கள் என்பதே
புரியவில்லை. இப்போது வருகிற பாட்டுகளினுடைய எடிட்டிங்கைப் பார்க்க, எனக்கு கொத்துக்
கறிதான் ஞாபகம் வருகிறது. இதனை நான் கொத்துக் கறி எடிட்டிங் என்றுதான் சொல்வேன்.
சினிமாவில் இந்தக் க்ளோஷப் ஷாட் என்பது ஒரு அற்புதமான விஷயம். இதனை எங்கே, எப்போது
பாவிக்க வேண்டும் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. நான் ஐரோப்பியன் மற்றது
ஹாலிவுட் இயக்குனர்கள் உட்படத்தான் சொல்கிறேன்.
எனக்குத் தெரிந்து, ஸத்யஜித்ரேதான் இந்த க்ளோஸப் ஷாட்களை அற்புதமாக அளவறிந்து பாவித்தவர்.
ஒரு குளோஷப் ஷாட்டை திரும்பத் திரும்பக் காண்பித்தால், அதில் பாதிப்பே இல்லாமல் போய்விடும்.
கேள்விகள்:ஐஸன்ஸ்டீன் /Battleship Potamkin///படத்தில் சில க்ளோஷப் ஷாட்களிலேயே படத்துக்கு
அற்புதமான வேகத்தைக் கொண்டு வந்திருக்கிறார். குரஷோவாவினுடைய /Seven Samurai/
படத்தில் சேற்றில் படிகிற குளம்படிகள், நம் முகத்தில் மோதுகிற மாதிரியான ஷாட்கள்,
அற்புதமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
/Sweet word liberty///என ஒரு ரஷ்யன் படம். இலத்தீனமெரிக்காவில் இருக்கிற சில
புரட்சியாளர்கள் சிறையிலிருந்து வெளியேற வேண்டும் எனத் திட்டம் தீட்டுகிறார்கள். சுரங்கம்
தோண்டி வெளியேற வேண்டும். சுரங்கம், சிறை வாசலுக்குப் பக்கத்திலிருக்கிற ஒரு கடைக்குப்
பின்னால் வரும். சிறை வாசலில் அடிக்கடி ராணுவ வாகனம் வந்து போய்க் கொண்டிருக்கும்.
கடைக்கு இராணுவ அதிகாரிகள் வருவார்கள். ராணுவக் காவற்காரர்கள் வருவார்கள். சிறை
வாசலில் காவற்காரர்கள் மாறுகிற ஒரு சந்தர்ப்பத்தில் தப்பிக்க வேண்டும். அந்தப் படத்தில
திடுக்கிடுகிற சம்பவங்கள், இரத்தம் கொட்டுகிற வன்முறை எதுவுமே காண்பிக்கப்படுவதில்லை.
ஆனால் படத்தினுடைய முதல் காட்சியில் இருந்து கடைசி வரைக்கும், நம்முடைய நெஞ்சு திக்
திக்கென அடித்துக் கொள்கிற மாதிரி இயக்குனர் படத்தினைக் கொண்டு போயிருப்பார்.
நான் அந்தப் படத்தைப் பார்த்து 20-25 வருடங்கள் இருக்கும். ஆனால் இப்போது நினைத்தாலும்
மனசுக்குள் பதட்டம் வருகிறது
பாலு: நீங்கள் ஒரு குளோஸ் ஷாட்டை எடுத்துக் கொடுத்திருந்தால்தான் எடிட்டிங்கில் அது வரும்.
என்னளவில் இயக்குனர்தான் ஸ்கிரிப்ட் எழுத வேண்டும். ஆனால் ஸ்கிரிப்ட் இல்லாமயே படங்கள்
பண்ணுகிற மேதமை கொண்ட இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு அது
புரியமாட்டேனென்கிறது.. என்னளவில் ஸ்கிரிப்ட் எழுதி முடித்தாலே என்னுடைய படத்தை
எடுத்தாகி விட்டது. அப்புறம் நான் ஒரு லைட் மேனைக் கூப்பிடுவேன். நடிகர் நடிகையரைக்
கூப்பிடுவேன். இவர்கள் மூலம் என் கனவை நான் நடைமுறைக்குக் கொண்டு வருகிறேன்.. ஒரு
கட்டிடக் கலைஞன் ப்ளுபிரின்ட் போட்டு முடிக்கிற மாதிரித்தான் இதுவும். அவரைப் பொறுத்த
அளவில் திட்டம் முடிந்தது. மிச்சம் நடைமுறைக்கு வரவேண்டும். அப்புறம்தான் கட்டிடத்
தொழிலாளர்களை வைத்துக் கட்டிடம் கட்டுகிறார்கள்.
சினிமா மொழி என்பது இப்படி எடிட்டிங், எதிர்பார்ப்பு, பதட்டம் எல்லாத்தையும் கொண்டுவரத்
தெரிவதுதான்.. Wages of Fear என ஒரு பிரெஞ்சுப் படம். கறுப்பு வெள்ளைப் படம். ஒரு
எண்ணைக் கிடங்கொன்று தீப்பிடித்திருக்கும். அதனை அணைக்க ஒரே வழி நைட்ரோ கிளிசரின் விட்டு
அணைக்க வேண்டும். நைட்ரோ கிளிசரினைக் கொண்டு வரவேண்டும். நைட்ரோ கிளிசரினை ஒரு
இடத்திலிருந்து அங்கு கொண்டு வரவேண்டும். அதனைக் கொண்டு வரும்போது கொஞ்சம் அழுத்தம்
ஏற்பட்டாலும் வெடித்துவிடும். அந்தப் படத்தில் எதிர்பார்ப்பையும் துயரத்தையும் அவன்
சினிமாவுக்காகக் கட்டமைக்க முடியும்.. நமக்குத் தெரியும், அந்த கன்டெய்னரில் நைட்ரோ
கிளிசரின் இல்லை என்பது நமக்குத் தெரியும். ஒரு சின்னத் துளி அதிலிருந்து ஒழுகுகிற
மாதிரிச் செய்வான். ஆனால் அதை அவன் உருவாக்கிக் கொண்டு போகிறவிதம், இந்தப் பயணம்தான்
அந்தப் படம்.
குறியீட்டளவில், அது எந்நேரமும் வெடிக்கப்போகிறது என்கிற உணர்வை வெளிப்படையாகச்
சொல்லாமல், பார்வையாளனுக்கு மெதுவாக ஊசி ஏற்றுகிற மாதிரி அந்தப் படம் கட்டப்பட்டுக்
கொண்டு போகிறது. அது எந்தச் சமயத்திலும் வெடிக்கலாம் என்கிற உணர்வு பார்வையாளனுக்குத்
தரப்படுகிறது,
Dead calm என்று ஒரு ஹாலிவுட் பிலிம். நிகோல் கிட்மன், சாம்நீல் நடித்த படம். படம்
முழுக்க கடலுக்கு நடுவில் நடக்கிறது. மூன்றே கேரக்டர்கள். குழந்தை இறந்த
துயரத்திலிருந்து மீள, கணவன் மனைவி இரண்டு பேர் தனிமையை நாடி கடலுக்குப் போகிறார்கள்.
அப்புறம் தன்னுடைய கப்பலில் இருக்கிறவர்களை எல்லாம் கொன்றுவிட்டு, இவர்களது படகிற்கு
வந்து இவர்களை ஏமாற்றி அடைக்கலம் எடுத்துக்கொள்கிற மனநோயாளி ஒருவன். இந்த நடிகர்
Titanic படத்தில் வில்லனாக வருகிறவர்.. படு பயங்கரமான த்ரில்லான படம் அது. இரண்டு
மணி நேரப்படம். மூன்று கேரக்டர்கள். கடல். இது மட்டும்தான். ஆனால் அந்தக் கிரேப்ட் அற்புதம்.
அற்புதமாக எடுத்திருக்கிறார்கள்.

No comments:
Post a Comment