அழியாத கோலங்கள்
அது தமிழ்த் திரைச் சரித்திரத்தில் ஒரு முக்கியமான படமென்று நான் கருதுகிறேன். சின்ன படம். ஒன்றரை மணிநேரம்தான் ஓடும் என்று நினைக்கிறேன். சின்னதொரு புதுக்கவிதை மாதிரி. அதைவிட விடலைப்பருவத்தை செம்மையாகக் காட்டிய படம் இதுவரை வரவில்லை. மூன்று பையன்கள் தம்மடிக்கிறார்கள்; பலான படம் பார்க்கிறார்கள்; பலான புத்தகம் படிக்கிறார்கள்; டீச்சரை டாவடிக்கிறார்கள்; அத்தை பெண்ணிடம் வழிகிறார்கள். ஒருவன் செத்துப்போய்விட படம் முடிந்துவிடுகிறது. அவ்வளவுதான். இசை - அல்லது இசையின்மை - அவ்வளவு இயல்பாக இருக்கிறது. ஷோபாதான் எவ்வளவு அழகு! பின்கட்டு தோட்டத்தில் பூத்த மலர் மலர் மாதிரி இருக்கிறார். பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல ஒரு வசீகரம்..."பூவண்ணம்" பாட்டு கேட்கும்போது மனசு எங்கெங்கோ போய் விடுகிறது. பாலு மகேந்திரா அப்பொதெல்லாம் நல்ல படங்கள் எடுத்துக் கொன்டிருந்தார்.

No comments:
Post a Comment