Saturday, 8 October 2011

கலை, கமர்ஷியல் பிரிவினை-பாலுமகேந்திரா

கலைப் படம், கமர்ஷியல் படம் என்று சினிமாவைப் பிரிக்காதீர்கள் என இயக்குநர் பாலுமகேந்திரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மோசர்பேர் மற்றும் புளூ ஓசன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் 'அவள் பெயர் தமிழரசி' படத்தின் துவக்க விழா சென்னையில் நேற்று நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் இயக்குநர் பாலுமகேந்திரா. தயாரிப்பாளர் தனஞ்செயன் வரவேற்றார்.

பின்னர் பாலுமகேந்திரா பேசியதாவது:

சினிமாவில் கலைப் படங்கள் என்று ஒன்று தனியாக இல்லை. சினிமா என்பதே ஒரு அரிய கலைதான்.

அதை ஆர்ட் பிலிம், கமர்ஷியல் பிலிம் என்று பிரிக்கத் தேவையில்லை.

நம் மண்ணின் கலாசாரத்தை, உணர்வுகளை ரத்தமும் சதையுமாக சொல்லும் படங்கள்தான் வெற்றி பெறுகின்றன.

நான் எடுத்த வீடு படத்தை ஆர்ட் படம் என்றார்கள். ஆனால் அந்த படத்தில் நான் லாபம் சம்பாதித்தேன்.

அழியாத கோலங்கள் கலைப்படம், விருதுக்குத்தான் லாயக்கு என்றார்கள். அது நல்ல வசூலுடன் வெள்ளி விழா கொண்டாடியது. எனவே மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிற படங்கள் நல்ல படங்கள்தான். எனவே சினிமாவில் எந்த பிரிவும் இல்லை, என்றார் அவர்.

விழாவில் சுப்பிரமணியபுரம் சசிகுமார், இயக்குநர்கள் வெங்கட் பிரபு, வெங்கடேஷ், இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி, படத்தின் நாயகன் ஜெய் ஆகியோர் பேசினர்.

No comments:

Post a Comment