Sunday, 9 October 2011

பாலுமகேந்திராவின் பட்டறையிலிருந்து..சிஷ்யரின் இயக்கத்தில் எத்தன்

பாலுமகேந்திராவின் பட்டறையிலிருந்து ஒரு புதிய மாணவர் வெளி வந்துள்ளார். சுரேஷ் என்ற அந்த இயக்குநர், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள முதல் படம் எத்தன்.

களவாணி படத்தை தயாரித்த நசீர் இப்படத்தை உருவாக்கியுள்ளார். விமல் நாயகன், அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் சனுஷா.

இப்படமும் கும்பகோணத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம். கிராமத்து வாழ்க்கைதான் இதன் கதைக் களமும் கூட. ஆனால் வழக்கமான கிராமியமாக இல்லாமல் இதை மாறுபட்ட கதையாக வடிவமைத்துள்ளாராம் சுரேஷ்.

குறிப்பாக கிராமத்துக் கதைகளிலேயே தொடர்ந்து நடித்து வரும் விமல், இப்படத்தில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறும் சுரேஷ், வாழ்வின் உச்சத்தை அடையும் ஆசையுடன் போராடும் இளைஞனின் வாழ்க்கையை இப்படத்தில் பதிவு செய்திருப்பதாக கூறுகிறார்.

படத்தில் சனுஷாவுக்கும் அருமையான கேரக்டராம். தாஜ் நூர் இசையமப்பில் உருவாகியுள்ள படம் இளைஞர்களுக்கு நல்ல படமாக மட்டுமல்லாமல், பாடமாகவும் அமையும் என்கிறார் சுரேஷ் நம்பிக்கையுடன்.

No comments:

Post a Comment