Saturday, 8 October 2011

பாலாவிற்கு சிறந்த இயக்குனருக்கான தேசியவிருது

பாலா
மதுரையில் 1966ம் ஆண்டு பிறந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்றவர். இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களிடம் திரைக்கலை பயின்றவர்.
சேது திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை துவக்கிய பாலா, இதுவரை நான்கு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
பாலாவின் திரைப்படங்கள் தேசிய விருதுகள், தமிழக அரசு விருதுகள், பிலிம்ஃபேர் விருதுகள் மற்றும் பல விருதுகளைப் பெற்றிருக்கின்றன. பாலாவின் முதல் மூன்று திரைப்படங்கள் 13 பிலிம்ஃபேர் விருதுகளைப் பெற்றிருக்கின்றன. அதில் பிதாமகன் மட்டும் 6 விருதுகளைப் பெற்றிருக்கிறது
நான்காவது படமான 'நான் கடவுள்' இரண்டு தேசிய விருதுகள், மூன்று தமிழக அரசு  விருதுகளைப் பெற்றிருக்கிறது.
'நான் கடவுள்' படத்திற்காக பாலாவிற்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது 
உலக சினிமா அரங்கில் தமிழ் சினிமாவினை உயர்த்தப் பிடிக்கும் இவரது திரைப்படங்கள் யதார்த்தமும் தனித்துவமான அழகியலும கொண்டவை. 
Balu Mehendra  
Balu Mehendra          
My son, Bala is the only one. When asked – which Indian Film Maker do you think is capable of making films on as International level to International Standards?

No comments:

Post a Comment