Saturday, 8 October 2011

எனக்கு கறுப்பு பெண்களை ரொம்ப பிடிக்கும் : பாலுமகேந்திராவின் 

அது ஒரு கனாக்காலம் போன்ற படங்களை இயக்கி, இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை கவர்ந்திழுத்த டைரக்டர் பாலுமகேந்திரா தனக்கு இருபத்தாறு வயதுதான் ஆகிறது. நான் வெள்ளை டை அடித்திருக்கிறேன் என்று கூறினார்.

டைரக்டர் பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் அவன் இவன் பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய டைரக்டர் பாலுமகேந்திரா, பாலாவும், நா.முத்துக்குமாரும் என் சிஷ்யர்கள். என் பிள்ளைகள். பாலா என் மூத்த மகன். அவனுக்கு நான் ரசிகன். விஷால், நல்ல நடிகர். அவருடைய நிறம் எனக்கு பிடிக்கும். பொதுவாகவே எனக்கு கறுப்பு ஆண்களையும், கறுப்பு பெண்களையும் ரொம்ப பிடிக்கும். கறுப்புதான் அழகு. கறுப்பு மீது எனக்கு காதல் உண்டு. என் கதாநாயகி அம்பிகா இங்கே இருக்கிறார். அவரை என் கதாநாயகி என்று குறிப்பிடுவதில் தப்பு இல்லை. என் டைரக்ஷனில், ஓளங்கள் என்ற படத்தில் அம்பிகா நடித்து இருக்கிறார். பிரபா இங்கே பேசும்போது, என்னை பெரியவர் என்று குறிப்பிட்டார். நான் வயதானவன் அல்ல. எனக்கு இருபத்தாறு வயதுதான் ஆகிறது. எல்லோரும் கறுப்பு டை அடித்துக்கொள்வார்கள். நான், வெள்ளை டை அடித்துக்கொள்கிறேன். அவ்வளதான், என்றார்.

நிகழ்ச்சியில், டைரக்டர் பாலா, நடிகர்கள் விஷால், ஆர்யா, ஆர்.கே, ஜி.எம்.குமார், நடிகைகள் அம்பிகா, ஜெயப்பிரபா, பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா, வசனகர்த்தா எஸ்.ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். எண்டர்டைன்மென்ட் ரங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment